பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேட்டை ஸ்ரீ சக்தி கண்ணனூர் புதுமாரியம்மன் ஆலயத்தில் சித்திரை மாத உற்சவத்தின் 5-ம் நாளினை முன்னிட்டு மூலவர் அம்மன் சமயபுரம் மாரியம்மனுக்கு பால், தயிர் ,பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர்.
பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. உற்சவர் அம்மன் நாக சர்ப்ப வாகனத்தில் திருவீதி உலா வந்தார்.