செடி, கொடிகளை அகற்றி தூய்மை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறதை படத்தில் காணலாம் 
உள்ளூர் செய்திகள்

காவலர் குடியிருப்பு பகுதிகளில் முளைத்துள்ள செடி, கொடிகள் அகற்றம்

பரமத்திவேலூர் பகுதியில் காவலர் குடியிருப்பு பகுதிகளில் முளைத்துள்ள செடி, கொடிகளை அகற்றும் பணி நடைபெற்றது.

மாலை மலர்

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் காவல் உட்கோட்டத்திற்கு உட்பட்ட 5 காவல் நிலையங்களில் பணியாற்றுபவர்கள் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் கொண்ட குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். 

இந்நிலையில் குடியிருப்பு பகுதிகளில் ஏராளமான செடி, கொடி, புல்கள் முளைத்துள்ளது. மேலும் இப்பகுதிகளில் கழிவு பொருட்களும் கிடந்தது. 

இந்நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி உத்தரவின்பேரில் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் மணிமாறன், பரமத்திவேலூர் டி.எஸ்.பி. ராஜாரணவீரன் மேற்பார்வையில் 100-க்கும் மேற்பட்ட காவலர்கள் காவலர் குடியிருப்பு பகுதிகளில் முளைத்துள்ள செடி கொடிகளையும் புல், பூடுகளையும், தேவையற்ற கழிவுகளையும் அகற்றி சுத்தம் செய்து தூய்மை செய்தனர். 

இதனால் காவலர் குடியிருப்பு பகுதி முழுவதும் செடி, கொடிகள் இன்றி இயல்பான நிலைக்கு வந்தது. இது காவலர்களுக்கிடையே பெரும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.