பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கோப்பணம்பாளையம் பரமேஸ்வரர் கோவிலில் உள்ள சனி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
அபிஷேக ஆராதனையை முன்னிட்டு சனிபகவான், அங்காளபரமேஸ்வரி அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், மஞ்சள், திருமஞ்சனம், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட 18 வகையான வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மன் மற்றும் சனி பகவான் பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சியளித்தார்.
இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சனிபகவான், அங்காள பரமேஸ்வரி அம்மன், மாசாணி அம்மன், அரசாயிஅம்மன், பரமேஸ்வரர், பாலமுருகன், காலபைரவர் மற்றும் பரிவார தெய்வங்களை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.