உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர் திடீர் மாயம்

நாமக்கல்லில் பள்ளி மாணவர் மாயமானார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

நாமக்கல்,

நாமக்கல் பகுதியை சேர்ந்த ஒரு மாணவர் முதலைப்பட்டி பள்ளியில் படித்து வருகிறார். 

இந்த நிலையில் வீட்டில் காலை தூங்கி கொண்டிருந்த மாணவரை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர்கள் அக்கம் பக்கத்தில் தேடி பார்த்துள்ளனர். 

இதுகுறித்து நாமக்கல் போலீசாரிடம் பெற்றோர் புகார் அளித்தனர். புகாரை தொடர்ந்து நாமக்கல் இன்ஸபெக்டர் தெய்வசிகாமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். 

பள்ளி மாணவன் மாயமானது நாமக்கல்லில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

SCROLL FOR NEXT