சிறப்பு அலங்காரத்தில் சங்கரர். 
உள்ளூர் செய்திகள்

ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் சங்கரர் ஜெயந்தி விழா

பரமத்திவேலூரில் உள்ள ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் சங்கரர் ஜெயந்தி விழா நடைபெற்றது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் சங்கரர் ஜெயந்தியினை முன்னிட்டு  பேட்டையில் உள்ள ராஜ ராஜேஸ்வரி மடாலயத்தில் சங்கரர் ஜெயந்தி விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சங்கரர்  படத்திற்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு நைவேத்தியங்களுடன்  அர்ச்சனையுடன்  தீபாராதனை நடைபெற்றது.  

இதில் சங்கரர் வரலாறு கதை    படிக்கப்பட்டு சிறப்பு சொற்பொழிவுகளுடன் மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சங்கரர் ஜெயந்தியினை சிறப்பித்தனர்.

விழா முடிவில் மகேஸ்வர பூஜையுடன் கலந்துகொண்ட அனைவருக்கும் அன்னதானம் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது.