ஊரக திறனாய்வு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்கள். 
உள்ளூர் செய்திகள்

குமரிபாளையம் கிராமத்தில் ஊரக திறனாய்வு நிகழ்ச்சி

குமரிபாளையம் கிராமத்தில் ஊரக திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் அருகே குமரிபாளையம் கிராமத்தில் ஊரக திறனாய்வு நிகழ்ச்சி நடைபெற்றது.பி.ஜி.பி வேளாண்மை கல்லூரி இறுதி ஆண்டு பயிலும் மாணவிகள் கிராம மக்களுக்கான ஊரக திறனாய்வு விழிப்புணர்வு நிகழ்ச்சியை வழிநடத்தினர். 

இதில் ஊர்மக்கள் பலரும் கலந்துகொண்டு மாணவிகளுக்கு உதவிகள் செய்தனர். நிகழ்ச்சியின் நோக்கமானது ஊரக திறனாய்வின் மூலம் ஒரு கிராமத்தின் வளங்கள்,அதை கையாளும் உத்திகள்,கிராமத்தின் பிரச்சனைகள், சாதக பாதகங்களை கட்டுப்படுத்தும் சக்திகள் ஆகியவை குறித்து ஊர்மக்களுக்கு வரைபடங்கள் மூலம் விளக்குவதாகும். 

இதில் கிராம மக்கள் தங்களது கிராமத்தின் வளங்கள் மற்றும் பிரச்சனைகள் வரைபடங்கள் மூலம் எளிமையாக புரிந்துகொண்டனர்.இதில் ஊர்பொதுமக்கள் மற்றும் துவக்கப்பள்ளி ஆசிரியர்கள் கலந்துகொண்டு ஊரக திறனாய்வு குறித்து அறிந்து கொண்டனர்.