ஆர்ப்பாட்டம் நடத்திய சாலைப்பணியாளர்கள். 
உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில் சாலைப்பணியாளர்கள் போராட்டம்

நாமக்கல்லில் சாலைப்பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாலை மலர்

நாமக்கல்:

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர்கள் சங்க நாமக்கல் கோட்டம் சார்பாக நாமக்கல் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம் முன்பாக மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நெடுஞ்சாலைகளை பராமரிக்க 5 கிலோ மீட்டருக்கு 2 சாலைப்பணியாளர்கள் என்ற வகையில் கிராமப்புற இளைஞர்களுக்கு பணி வழங்கவேண்டும், பணி நீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்தில் சங்கத்தின் மாவட்ட தலைவர் வேலு, செயலாளர் ஜாகீர் உசேன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.