உள்ளூர் செய்திகள்

பள்ளிப்பாளையம் பகுதிகளில் குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை

குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதிகளில் குழந்தை தொழிலாளர் குறித்து ஆய்வு செய்ய கோரிக்கை வைத்துள்ளனர்.

மாலை மலர்

குமாரபாளையம்:

குமாரபாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் விசைத்தறி தொழில், ஸ்பின்னிங் மில் தொழில் அதிகம் நடைபெற்று வருகிறது. 

இதில் குழந்தை தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. இதனால் ஓடி சென்று காதல் திருமணம் செய்து கொள்வது, குழந்தை திருமணம், இளவயது கருவுறுதல், போன்ற சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. 

இது குறித்து சைல்டுலைன் அமைப்பினர் ஆய்வு செய்து, குழந்தை தொழிலாளர்களை மீட்டு, அவர்களை பள்ளிகளில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.