திருத்தேர் திருவிழாவை முன்னிட்டு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

தேவராய சமுத்திரம் வெள்ளக்கல் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் -கம்பம் நடும் நிகழ்ச்சி

தேவராய சமுத்திரம் வெள்ளக்கல் மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டுதல் -கம்பம் நடும் நிகழ்ச்சி நடந்தது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் அருகே உள்ள பொத்தனூர், தேவராய சமுத்திரத்தில்  சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் கோவில் திருத்தேர் திருவிழா கம்பம் நடப்பட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 

விழாவையொட்டி வருகிற 24-ந் தேதி மறுக்காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 25-ந் தேதி சப்பாரம் வாகனத்தில் அம்மன் திருவீதி உலா நிகழ்ச்சியும், 26-ந் தேதி சிம்ம வாகனத்திலும், 27-ந் தேதி பூத வாகனத்திலும், 28-ந் தேதி அன்னபட்சி வாகனத்திலும், 29-ந் தேதி யானை வாகனத்திலும் 30-ந் தேதி பூந்தேர் வாகனத்திலும் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 

மே மாதம் 1-ந் தேதி மாலை வடிசோறு நிகழ்ச்-சி-யும்,  வெட்டும் குதிரை வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சியும், 2-ந் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சியும், பொதுமக்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீர் எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

3-ந் தேதி திருத்தேரில் சுயம்பு வெள்ளக்கல் மாரியம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. 4-ந் தேதி அலகு போடுதல், அக்னிச்சட்டி எடுத்தல் மற்றும் பொங்கல் மாவிளக்கு நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 

5-ந் தேதி கம்பம் ஆற்றில் விடும் நிகழ்ச்சியும், 6-ந் தேதி மஞ்சள் நீராடல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து முத்துப்பல்லக்கில் அம்மன் முக்கிய வீதிகள் வழியாக திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

திருத்தேர் திருவிழாவிற்-கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர், ஊர்காரியக்காரர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.