கட்டமராபாளையம், விநாயகர் கோவில் திடலில் பொன்னர்-சங்கர் கதை பாடும் நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

கட்டமராபாளையத்தில் பொன்னர்-சங்கர் கதை பாடும் நிகழ்ச்சி

கட்டமராபாளையத்தில் பொன்னர்-சங்கர் கதை பாடும் நிகழ்ச்சி நடந்தது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா மோகனூர் செல்லும் சாலையில் உள்ள ஓலப்பாளையம் ஊராட்சி கட்டமராபாளையம், விநாயகர் கோவில் திடலில் பொன்னர்-சங்கர் கதை பாடும் நிகழ்ச்சி, கடந்த 8-ந் தேதி முதல்  தொடர்ந்து நடைபெற்று வருகிறது, இதில் பொன்னர்- முத்தாயி, சங்கர்-பவளாயி  திருமணம் நடைபெற்றது. 

இதில் உள்ளூரை  சேர்ந்த மாணவர்களுக்கு பொன்னர்- முத்தாயி, சங்கர்-பவளாயி வேடம் அணிந்து பங்கேற்றனர். தொடர்ந்து வருகிற 30-ந் தேதி இரவு பொன்னர் சங்கர் கதையில் முக்கிய நிகழ்வான படுகளம் நிகழ்ச்சி நடைபெறுகிறது.