உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவு

குமாரபாளையத்தில் நெடுஞ்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத்துறை உத்தரவிட்டுள்ளது

மாலை மலர்

குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நெடுஞ்சாலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள குமாரபாளையம், பவானி சாலையில், கத்தேரி பிரிவு, முதல் பழைய காவேரி பாலம்  வரை, போக்குவரத்து சீராகவும், விபத்தினை தடுக்கும் பொருட்டும், சாலைகளின் இருபுறமும் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான இடங்களில் அமைக்கப்பட்டுள்ள, சாலையோர ஆக்கிரமிப்புகள், பழைய இரு சக்கர வாகனங்கள்  கடைகள் மற்றும் தள்ளுவண்டி கடைகள் மற்றும் கடைகளுக்கு முன்பாக போட்டு வைத்துள்ள சாய்வு தளம், படிக்கட்டுக்கள் அனைத்தையும் தாங்களாக அகற்றிக்கொள்ள வேண்டும்.

தவறும் பட்சத்தில் காவல்துறை, வருவாய்த்துறை அலுவலர்கள் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உயர் அதிகாரிகளின் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும்.

ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும். பறிமுதல் செய்யப்பட்ட பொருட்கள் திருப்பி வழங்கப்படமாட்டாது. இதனால் தங்களுக்கு ஏற்படும் நஷ்டங்களுக்கு நெடுஞ்சாலைத்துறை பொறுப்பேற்காது. இந்த தகவலை குமாரபாளையம் நெடுஞ்சாலைதுறை  தெரிவித்துள்ளது.