நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 67 ஆயிரத்து 967 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு இருந்தனர். நேற்று ஒரே நாளில் மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. எனவே இதுவரை பாதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 67 ஆயிரத்து 971 ஆக அதிகரித்து உள்ளது.
இதுவரை 67 ஆயிரத்து 322 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி வீடு திரும்பி உள்ளனர். மீதமுள்ள 115 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாமக்கல்லில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த 68 வயது மூதாட்டி நேற்று சிகிச்சை பலனின்றி இறந்தார்.
முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை சேர்த்து இதுவரை நாமக்கல் மாவட்டத்தில் 534 பேர் பலியாகி உள்ளனர்.