விழிப்புணர்வு பேரணி நடைபெற்ற போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

தேசிய அறிவியல் தின விழிப்புணர்வு பேரணி

பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை வட்டாரத்தில் தேசிய அறிவியல் தினம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் கபிலர் மலை வட்டாரத்தில் தேசிய அறிவியல் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இப்பேரணி இமயம் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதி ஆண்டு மாணவிகள் சார்பில் நடத்தப்பட்டது. 

இப்பேரணியில் பள்ளி மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இந்த ஆண்டிற்கான தேசிய அறிவியல் தினத்திற்கான நோக்கம் நிலையான எதிர்காலத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் ஒருங்கிணைந்த அணுகுமுறை என்பதாகும்.

 இதில் அறிவியல் பற்றிய விழிப்புணர்வு ஊர் மக்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணாக்கர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.