நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடந்தபோது எடுத்தபடம். 
உள்ளூர் செய்திகள்

நடமாடும் மண் பரிசோதனை முகாம்

நாமக்கல் மாவட்டத்தில் விவசாய நிலத்தில் உள்ள மண்களின் தன்மைகளை அறிய அதிகாரிகள் ஆய்வு செய்ய நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா எலந்தக்குட்டை கிராமத்தில் திருச்செங்கோடு நடமாடும் மண் பரிசோதனை முகாம் நடைபெற்றது. 

இதில்  தலைமை வேளாண் அதிகாரி சவுந்தரராஜன் விவசாயிகளிடம் மண் மாதிரிகள் பெற்று மண் பரிசோதனை வாகனத்தில் மண்ணில் உள்ள சத்துகளின் அளவு குறித்து ஆய்வு செய்தார். 

பின்னர் பரிந்துரைக்கப்பட்ட சத்துகளின் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும் ஆய்வறிக்கை விவசாயிகளிடம் வழங்கப்பட்டது. 

அப்போது பெரம்பலூர் வேளாண்மை கல்லூரி மாணவர்களான சந்தோஷ்குமார்,  செல்வகுமார், சிவசங்கர், சிவா, சிவராமன் மற்றும் சுவேதனன் ஆகியோர் மண் மாதிரி மற்றும் பாசன நீர் மாதிரி எடுக்கும் முறைகள் குறித்து விவசாயிகளிடம் செயல் முறை அளித்தனர்.