பக்தர்கள் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலமாக வந்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

மாரியம்மன் கோவில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம்

குமாரபாளையம் அருகே மாரியம்மன் கோவில் விழாவில் தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது.

மாலை மலர்

குமாரபாளையம்:

குமாரபாளையம் அருகே தட்டான்குட்டை  ஊராட்சி, வீரப்பம்பாளையம்  மாரியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. 

இதையொட்டி காவேரி ஆற்றிலிருந்து மேள தாளங்கள் முழங்க தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. 

இதில் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் சிறப்பு அலங்காரங்களுடன் அம்மன் அருள்பாலித்தவாறு வந்தார். 

கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார ஆராதனைகள் நடத்தப்பட்டு பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.