நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் வருமுன் காப்போம் திட்ட முகாம், வட்டாரத்திற்கு தலா 3 வீதம் மொத்தம் 45 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு இதுவரை 25 முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. மேலும் இன்று முதல் வருகிற 21-ம் தேதி வரை 10 முகாம்கள் நடைபெற உள்ளன.
அதன்படி, இன்று வருமுன் காப்போம் திட்ட முகாம் மல்லசமுத்திரம் வட்டாரத்தில் மாமுண்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும், வெண்ணந்தூர் வட்டாரத்தில் நாச்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் நடைபெற்றது.
17-ம் தேதி நாமக்கல் வட்டாரத்தில் விட்டம நாய்க்கன் பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், புதுச்சத்திரம் வட்டாரத்தில் காரைக் குறிச்சிபுதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் நடைபெறுகிறது. மேலும், எருமப்பட்டி வட்டாரத்தில் வரகூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும்,
பரமத்தி வட்டாரத்தில் பில்லூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், மோகனூர் வட்டாரத்தில் ந.புதுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், எலச்சி பாளையம் வட்டாரத்தில் பொம்மம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியிலும், வெண்ணந்தூர் வட்டாரத்தில் மின்னக்கல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் நடைபெறுகிறது.
21-ம் தேதி வெண்ணந்தூர் வட்டாரத்தில் கட்டநாச் சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியிலும் மருத்துவ முகாம் நடைபெற வுள்ளது. இங்கு பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மருத்துவ பரிசோதனைகள், தேவைப் பட்டால் மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மருத்துவ மனையை நாடிச் செல்லாமல் தங்களுடைய பகுதிகளில் நடைபெறும் முகாமில் உரிய பரிசோதனைகளை மேற்கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.