உள்ளூர் செய்திகள்

சேந்தமங்கலத்தில் லட்சுமி நாராயண பெருமாள் கோவில் திருக்கல்யாணம்

சேந்தமங்கலத்தில் மாசிமாத திருவிழாவையொட்டி லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் தேர்திருவிழாவை ரத்து செய்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.

கொல்லிமலை:

சேந்தமங்கலம் பழைய பஸ் நிலைய பகுதியில் பழமைவாய்ந்த லட்சுமி நாராயண பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் மாசி மாத தேரோட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக தேரோட்ட நிகழ்ச்சி நடைபெறவில்லை. 

இதனால் அப்பகுதியை சேர்ந்த பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்தாண்டு கோவில் தேரோட்டம் நடைபெறுமா? என்று பொதுமக்கள் எதிர்பார்த்து வந்தனர். இதற்கிடையே பெருமாள் கோவிலில் மாசி தேர்த்திருவிழா நடத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடந்தது. கோவில் செயல் அலுவலர் லட்சுமிகாந்தன் தலைமை தாங்கினார். 

மின்னம்பள்ளி, பொட்டணம், செல்லப்பம்பட்டி ஆகிய கிராமங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆலோசனைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் தேரோட்டத்தை ரத்து செய்து சாமி திருக்கல்யாண நிகழ்ச்சியை நடத்த ஏற்பாடு செய்யபப்ட்டது. 

அதன்படி இன்று  இன்று காலை சோமேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி மற்றும் லட்சுமி நாராயண பெருமாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். மாலையில் அந்த சாமிகளின் திருவீதி உலா நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.