ராமநவமியையொட்டி குமாரபாளையம் விட்டலபுரி ராமர் கோவிலில் சாமி சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் ராமநவமி விழா கொண்டாட்டம்

குமாரபாளையம் பகுதி ராமர், பெருமாள் கோவில்களில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.

மாலை மலர்

குமாரபாளையம்:

குமாரபாளையம் பகுதி ராமர், பெருமாள் கோவில்களில் ராமநவமி விழா கொண்டாடப்பட்டது.

 இதையொட்டி, குமாரபாளையம் திருவள்ளுவர் நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத சவுந்தரராஜ பெருமாள் கோவில், குமாரபாளையம் அக்ரஹாரம் லட்சுமி நாராயண சாமி கோவில், விட்டலபுரி பாண்டுரங்கர் கோவில், ராமர் கோவில், ஜெய்ஹிந்த் நகர் ஸ்ரீதேவி பூதேவி சமேத புருஷோத்தம பெருமாள் கோவில், கோட்டைமேடு ஸ்ரீதேவி பூதேவி சமேத தாமோதரசாமி கோவில், கள்ளிப்பாளையம் பெருமாள் கோவில் உள்ளிட்ட பல கோவில்களில் சிறப்பு அபிஷேக, அலங்கார, ஆராதனைகள் நடந்தன. 

பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.