குமாரபாளையத்தில் ஓட்டல், பேக்கரி, டீ கடைகளில் உணவுபொருள் ஆய்வாளர் இளங்கோ ஆய்வு செய்த காட்சி. 
உள்ளூர் செய்திகள்

ஓட்டல், பேக்கரி கடைகளில் உணவுபொருள் ஆய்வாளர் ஆய்வு

குமாரபாளையத்தில் ஓட்டல், பேக்கரி கடைகளில் உணவுபொருள் ஆய்வாளர் ஆய்வு செய்தார்.

மாலை மலர்

குமாரபாளையம்:

குமாரபாளையத்தில் ஓட்டல், பேக்கரி, டீ  கடை உள்ளிட்ட பல்வேறு கடைகளில்  உணவுபொருள் ஆய்வாளர் இளங்கோ ஆய்வு செய்தார். இது குறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

குமாரபாளையம் நகரில் சேலம் சாலை, எடப்பாடி சாலை, பள்ளிப்பாளையம் சாலை பகுதியில் உள்ள ஓட்டல், பேக்கரி, டீ  கடை, மளிகை கடை உள்ளிட்ட பல கடைகளில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 தரமில்லாத உணவு பொருள் விற்பனை, காலாவதியான உணவு பொருட்கள், கடை உரிமம் புதுப்பித்தல் ஆகியன குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விதி மீறியவர்களிடம் எச்சரிக்கை செய்யபட்டது. இவ்வாறு அவர் கூறினார்.