பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் சகன்ஷா அவுலியா தர்கா பள்ளி வாசலில் ரமலான் பண்டிகையை முன்னிட்டு இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
சகன்ஷா அவுலியா தர்கா பள்ளி வாசலில் நடைபெற்ற இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சிக்கு பள்ளி வாசல் நிர்வாக கமிட்டி செயலாளர் வரவேற்று பேசினார். இதில் அனைத்து கட்சியினர், பல்வேறு சங்கங்களைச் சேர்ந்தவர்கள் மற்றும் பொது
மக்கள் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சகன்ஷா அவுலியா தர்கா பள்ளி வாசல் உறுப்பினர்கள் முபாரக்,ஆபித்,ஜின்னா உள்ளிட்டோர் செய்திருந்தனர்.