வேலூர் அரசு மருத்துவமனையில் வேலூர் பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் குப்பைகளை அகற்றி தூய்மை செய்த போது எடுத்த 
உள்ளூர் செய்திகள்

அரசு மருத்துவமனை வளாகம் தூய்மைப்படுத்தும் பணி

வேலூரில் அரசு மருத்துவமனை வளாகம் தூய்மைப்படுத்தும் பணி நடைபெற்றது.

பரமத்திவேலூர்,

நாமக்கல் மாவட்டம் வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட வேலூர் அரசு பொது மருத்துவமனையில் ‘நம் மருத்துவமனை மகத்தான மருத்துவமனை‘ என்ற திட்டத்தின் கீழ் அரசு மருத்துவமனை வளாகத்தினை தூய்மை படுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டது. 

மருத்துவமனையின் கழிப்பறைகள், கட்டிடத்தின் மேற்கூரைகள், வடிகால், சுற்றியுள்ள பகுதிகள்மற்றும் மருத்துவமனை வளாகத்தில் பிற்பட்ட அனைத்துப் பகுதிகளிலும் சுத்தம் செய்யப்பட்டு தூய்மை படுத்தப்பட்டது. 

பணியின் போது பேரூராட்சியின் துப்புரவு ஆய்வாளர் குருசாமி, துப்புரவு மேற்பார்வையாளர்கள் தாமரைச்செல்வி, வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

SCROLL FOR NEXT