உள்ளூர் செய்திகள்

மோட்டார்சைக்கிள் மோதி பழ வியாபாரி படுகாயம்

மோட்டார்சைக்கிள் மோதி பழ வியாபாரி படுகாயம் அடைந்தார்.

குமாரபாளையம்,

குமாரபாளையம் அம்மன் நகரில் வசிப்பவர் ராமலிங்கம் (வயது40)வாழைப்பழ வியாபாரி. இவர் நேற்று முன்தினம் சேலம் சாலையில் பவானி நோக்கி தனது மோட்டார் சைக்கிளில் மதீனா ஸ்டோர் அருகே வந்த போது, முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் நின்றதால் இவரும் தனது வாகனத்தை நிறுத்தினார். 

அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த அடையாளம் தெரியாத மோட்டார் சைக்கிள் மோதியதில், ராமலிங்கத்திற்கு தலை மற்றும் உடலின் பல இடங்களில் பலத்த காயங்கள் ஏற்பட்டது. இவர் ஈரோடு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டுள்ளார்.

 இது குறித்து குமார பாளையம் சப் இன்ஸ் பெக்டர் மலர்விழி வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகிறார். விபத்தை ஏற்படுத்தி விட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.