பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் சுற்றுவட்டார பகுதிகளில் பல்வேறு வகையான பூக்கள் பயிர் செய்யப்பட்டுள்ளது.
இங்கு விளையும் பூக்களை பரமத்திவேலூரில் உள்ள பூக்கள் ஏல சந்தைக்கு விவசாயிகள் கொண்டு வருகின்றனர். வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் பூக்களை ஏலம் எடுக்க வருகின்றனர்.
கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி ரூ.240-க்கும், சம்பங்கி கிலோ ரூ.60-க்கும், அரளி கிலோ ரூ.150-க்கும், ரோஜா கிலோ ரூ.160-க்கும், முல்லை பூ ரூ.400-க்கும், செவ்வந்திப்பூ ரூ.150-க்கும், கனகாம்பரம் ரூ.500-க்கும் ஏலம் போனது.
இந்த நிலையில் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு நேற்று நடைபெற்ற ஏலத்தில் குண்டுமல்லி கிலோ ரூ.450-க்கும், சம்பங்கி கிலோ ரூ.140-க்கும், அரளி கிலோ ரூ.340-க்கும், ரோஜா கிலோ ரூ.250-க்கும், முல்லை பூ கிலோ ரூ.800-க்கும், செவ்வந்திப்பூ ரூ.240-க்கும், கனகாம்பரம் ரூ.700-க்கும் ஏலம் போனது.
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு பூக்கள் விலை உயர்ந்து காணப்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.