உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோடு அருகே குப்பை கிடங்கில் தீ

திருச்செங்கோடு அருகே குப்பை கிடங்கில் தீ பற்றி எரிந்தது.

மாலை மலர்

திருச்செங்கோடு:

திருச்செங்கோடு நகராட்சி பகுதிகளைச் சேர்ந்த குப்பைகள் அணிமூர் என்ற பகுதியில் கொட்டப்பட்டு வந்தது இதற்கு அணிமூர் பகுதி பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர் தங்கள் பகுதியில் குடிநீர் வீணாவதாகவும் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் தோல் நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களாலும் கொசுக்கடியால் ஏற்பட்டு வருவதாகவும் பொதுமக்கள் புகார் கூறி வந்த நிலையில் அவ்வப்போது குப்பைக்கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டு வந்தது.

இதனால் பரவும் புகை மூச்சுமுட்ட செய்வதாகவும் இரவில் தூங்க முடியவில்லை எனவும் தீப்பற்றினால் அணைக்க இரண்டு நாட்களாவது ஆகிறது எனவும் பொதுமக்கள் புகார் கூறி வந்தனர் இந்த நிலையில் இன்று மாலை குப்பையில் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியது.

 வேகமாக வீசிய காற்றினால் தீ குப்பையில் பரவத்தொடங்கியது கொழுந்துவிட்டு எரியத் தொடங்கிய குப்பைக் கிடங்கிலிருந்து கிளம்பிய புகை மேகமூட்டம் போல் காணப்பட்டது இதைக்கண்ட பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து தீயணைப்பு நிலைய அலுவலர் குணசேகரன் தலைமையில் வந்த தீயணைப்புத் துறையினர் வேகமாக தீயை அணைக்க முயற்சி செய்தனர்.

தண்ணீர் பற்றாக்குறையின் காரணமாக தனியார் கல்லூரி மற்றும் தனியார் தொழில் நிறுவனங்களில் இருந்து தண்ணீர் பெற்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். காற்றின் வேகம் அதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்து வேகமாக பரவியது கடும் இருள் சூழ்ந்ததால் புகை மூட்டத்தில் சென்று தீயை அணைக்க முடியாமல் தீயணைப்பு துறையினர் தொடர்ந்து போராடி வருகின்றனர்