உள்ளூர் செய்திகள்

பல்டாக்டரின் உதவியாளர் விபத்தில் பலி

குமாரபாளையம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பல் டாக்டரின் உதவியாளர் சாவு.

மாலை மலர்

குமாரபாளையம்: 

சேலம் மாவட்டம் வைகுந்தம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடாசணீம் (வயது 35). இவர் ஈரோடு மாவட்டம் குருவரெட்டியூர் அரசினர் ஆஸ்பத்திரியில் பல் டாக்டரின் உதவியாளராக பணியாற்றி வந்தார். 

நேற்று பணி முடிந்து வைகுந்தத்தில் உள்ள தனது வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார். குமாரபாளையம் அருகே உள்ள சேலம்-கோவை புறவழி சலையில் எதிர்மேடு பகுதியில் நேற்று இரவு 8 மணி அளவில் சென்று கொண்டிருந்தார். 

அப்போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயமடைந்த வெங்கடாசலம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுபற்றி  குமாரபாளையம் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.