ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை படத்தில் காணலாம். 
உள்ளூர் செய்திகள்

இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்

பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து நூதன போராட்டம்

மாலை மலர்

திருச்செங்கோடு:

பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை கண்டித்து திருச்செங்கோடு அருகே எலச்சிபாளையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் இருசக்கர வாகனத்திற்கு மாலை அணிவித்து நூதனமான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.மாவட்ட செயற்குழு உறுப்பினர் சுரேஷ் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார்.

ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ரமேஷ். கிட்டுசாமி. ரஹ்மத். கிளை செயலாளர் சந்திரன் கந்தசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.