உள்ளூர் செய்திகள்

அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் பக்தர்கள் கிரிவலம்

சித்ரா பவுர்ணமியையொட்டி அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலில் பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.

திருச்செங்கோடு:

திருச்செங்கோட்டில் பிரசித்திப்பெற்ற அர்த்தநாரீஸ்வரர் மலை கோவில் உள்ளது. இந்த மலையை சுற்றி கிரிவலப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

சித்ராபவுணர்மியையொட்டி நேற்று சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் அர்த்தநாரீஸ்வரர் மலை கோவிலுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் மலையை சுற்றி கிரிவலம் சென்றனர். 

இதையொட்டி அங்கு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வெளியூர்களில் இருந்து பக்தர்கள் வாகனங்களில் குவிந்ததால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. திருச்செங்கோடு நகரை கடந்து செல்வதற்கு நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

SCROLL FOR NEXT