உள்ளூர் செய்திகள்

குமாரபாளையத்தில் வெறிச்சோடிய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம்

குமாரபாளையத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெறிச்சோடி காணப்படுகிறது.

மாலை மலர்

குமாரபாளையம்: 

நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம் குமாரபாளையத்தில் செயல்பட்டு வருகிறது.

இதில் மாவட்ட அலுவலராக இருந்த செல்வகுமார் பணியிட மாற்றம் செய்யப்பட்டதால், மோகன் என்பவர் ஒரு மாதம் முன்பு மாவட்ட அலுவலராக பணியில் சேர்ந்தார். இது பற்றி மோகன் கூறியதாவது: 

 குமாரபாளையத்தில் செயல்பட்டு வந்த நாமக்கல் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலக உதவி பொறியாளர்களான கிருஷ்ணன், தீனதயாளன் இருவரும் பணியிட மாற்றம் செய்யப்பட்டதில், கிருஷ்ணன் நாமக்கல்லுக்கும், தீனதயாளன் ஓசூருக்கும் செல்லவுள்ளனர். இவர்களுக்கு பதிலாக குணசேகரன் என்பவர் குமாரபாளையம் அலுவலகத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அவரும் விடுப்பில் சென்றுள்ளார். இவ்வாறு அவர் கூறினார். 

அலுவலர்கள் இருந்த போதே, சில சாயப்பட்டறையினர் கழிவுநீரை பகல், மற்றும் இரவு நேரங்களில்  காவிரி ஆற்றில் கலந்து மாசுபடுத்தி வந்தனர். இப்போது அலுவலர்கள் இல்லாத நிலையில் கழிவுநீரை காவிரியில் விட்டு மாசு படுத்தி வரும் நபர்களுக்கு கொண்டாட்டமாக உள்ளது. எனவே  குடிநீரை காக்க உடனடியாக மாசுக்கட்டுப்பாட்டு அலுவலர்களை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.