பரமத்திவேலூர்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பெரியகரசப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணி மகன் கவின்( 21). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் மயக்கவியல் துறையில் படித்து வந்தார்.
பின்னர் படிப்பை பாதியில் விட்டு விட்டு வீட்டிற்கு வந்தார். படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டு வீட்டிற்கு வந்த மாணவன் கவின் விரக்தியில் சோகமாக வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் கவின் வீட்டில் யாரும் இல்லாதபோது வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்துக் குடித்துவிட்டார்.
உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் .
இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.