உள்ளூர் செய்திகள்

ரூ.18¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்திவேலூரில் ரூ.18¼ லட்சத்துக்கு தேங்காய் பருப்பு ஏலம் நடைபெற்றது.

மாலை மலர்

பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் ஒவ்வொரு வாரமும் வியாழக்கிழமை தேங்காய் பருப்பு ஏலம் நடந்து வருகிறது. 

கடந்த வாரம் நடந்த ஏலத்துக்கு 14 ஆயிரத்து 456 கிலோ தேங்காய் பருப்பு விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. அதில் தேங்காய் பருப்பு ஒரு கிலோ அதிகபட்சமாக ரூ.90.99-க்கும், குறைந்தபட்சமாக ரூ.73.19-க்கும், சராசரியாக ரூ.87.69-க்கும் ஏலம் போனது.

மொத்தம் ரூ.12 லட்சத்து 29 ஆயிரத்து 74-க்கு வர்த்தகம் நடைபெற்றது. நேற்று நடைபெற்ற ஏலத்திற்கு ‌‌‌‌‌‌‌‌‌‌21 ஆயிரத்து 818 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. 

இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.93.75-க்கும், குறைந்தபட்சமாக ரூ.75-க்கும், சராசரியாக ரூ.84.09-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.18 லட்சத்து 31 ஆயிரத்து 913-க்கு வர்த்தகம் நடைபெற்றது.

கடந்த வாரத்தை விட இந்த வாரம் தேங்காய் பருப்பு விலை உயர்ந்துள்ளதால் தென்னை விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.