பரமத்திவேலூர்:
பரமத்திவேலூர் வெங்கமேட்டில் உள்ள மின்னணு தேசிய வேளாண்மை சந்தையில் கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 16 ஆயிரத்து 997 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டுவந்திருந்தனர்.
இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.92.70-க்கும், குறைந்தபட்சமாக ரூ.84.60-க்கும், சராசரியாக ரூ.90.50-க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.15 லட்சத்து 15 ஆயிரத்து 172-க்கு வர்த்தகம் நடைபெற்றது.
இந்த வாரம் நடைபெற்ற ஏலத்திற்கு 17 ஆயிரத்து 654 கிலோ தேங்காய் பருப்பை விவசாயிகள் கொண்டு வந்திருந்தனர். இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.88.09-க்கும், குறைந்தபட்சமாக ரூ.71.00-க்கும், சராசரியாக ரூ.85.99-க்கும் ஏலம் போனது.
மொத்தம் ரூ.14 லட்சத்து 83 ஆயிரத்து 558-க்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் பருப்பின் விலை சரிவடைந்ததால் தென்னை விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.