உள்ளூர் செய்திகள்

கார் மோதி தொழிலாளி பலி

கார் மோதி தொழிலாளி பலியானார்.

மாலை மலர்

Namakkal News, Worker, killed, car, crash, நாமக்கல் செய்திகள், கார், மோதி, தொழிலாளி, பலி,

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர்  அருகே உள்ள மரவாபாளையத்தை சேர்ந்தவர் ராமலிங்கம் (வயது 65) .கூலி தொழிலாளி. இவர் கடைக்குச் சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்குச் செல்ல கரூரில் இருந்து நாமக்கல் செல்லும் பை-பாஸ் சாலையை கடக்க முயன்றார். 

அப்போது பரமத்தி வேலூ–ரில் இருந்து திருச்செங்கோடு நோக்கி  சென்று கொண்டிருந்த கார் ராமலிங்கத்தின் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது. 

இதில் படுகாயமடைந்த அவரை அவ்வழியாக வந்தவர்கள் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி ராமலிங்கம் உயிரிழந்தார். 

விபத்து குறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்ததில் விபத்தை ஏற்படுத்திய கார் டிரைவர் திருச்செங்கோடு அருகே உள்ள புள்ளாகவுண்டம்–பட்டியைச் சேர்ந்த சரவணன் என்பது தெரியவந்தது. அவரை போலீசார் தீவிரமாக  தேடி வருகின்றனர்.