உள்ளூர் செய்திகள்

சேலம் வழியாக சென்ற ரெயிலில் சிக்கிய கஞ்சா

சேலம் வழியாக சென்ற ரெயிலில் சிக்கிய கஞ்சாவை ரயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர்.

சேலம்:

ஆந்திராவில் இருந்து சேலம் வழியாக கடத்தப்படும் ரெயிலில் கஞ்சா கடத்தலை தடுப்பதற்காக சேலம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படையினர் தனிப்படை அமைத்து ரயில்களில் தீவிர  சோதனை நடத்தி வருகின்றனர். 

இந்த நிலையில் இன்று அதிகாலை ஜார்கண்ட் மாநிலத்தில் இருந்து கேரளா செல்லும் தன்பாத் ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரெயிலில் போலீசார் சக்திவேல் ,சதீஷ்குமார், சென்ன கேசவன், கவியரசு, அருண்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் சோதனை நடத்தினர். 

சோதனையில் 3 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது, இதனையடுத்து ரயில்வே போலீசார் அதனை பறிமுதல் செய்தனர்.

SCROLL FOR NEXT