நாமக்கல்:
நகர்புற உள்ளாட்சி தேர்தலில் நாமக்கல் நகராட்சியில் 39 வார்டுகளில் தி.மு.க. 36 இடங்களை கைப்பற்றியது. அ.தி.மு.க. ஒரு இடத்திலும், மற்ற 2 இடங்களிலும் தி.மு.க. ஆதரவு பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வானார்கள்.
மொத்தம் உள்ள 39 வார்டுகளில் அ.தி.மு.க. 3 வார்டுகளில் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. 9 வார்டுகளில் பா.ஜ.க. 3-ம் இடத்தை பிடித்துள்ளது. சுயேட்சைகள் 14 இடங்களில் போட்டியிட்டு 3-ம் இடத்தை பிடித்துள்ளது.