உள்ளூர் செய்திகள்

கபிலர்மலையில் 56 ஆசிரியர்களுக்கு பணியிடை விழிப்புணர்வு பயிற்சி முகாம்

கபிலர்மலையில் 56 ஆசிரியர்களுக்கு பணியிடை விழிப்புணர்வு பயிற்சி முகாம் நடைபெற்றது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

கபிலர்மலையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி சார்பில் தொடக்க நிலை, உயர்நிலை, மேல் நிலைப்பள்ளியில் பணி புரியும் சிறப்பு பயிற்றுநர்கள், இயன்முறை மருத்துவர்கள் மற்றும் கபிலர்மலை ஒன்றியத்திற்கு உட்பட்ட 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் பணிபுரியும் 56 ஆசிரியர்களுக்கு பணியி டைப் பயிற்சி நடைபெற்றது.

இப்பயிற்சியில் கட்டாயக் கல்வி, உரிமைச் சட்டம்  2009, அனைத்து வகை மாற்றுத் திறனுடைய குழந்தைகளை அருகாமையில் உள்ள பள்ளி மற்றும் பள்ளி ஆயத்த மையங்களில் சேர்த்தல், பள்ளிக்கு வர இயலாத கடும் மாற்றுத்திறன் கொண்ட மாணவர்களுக்கு இல்லம் சார்ந்த கல்வி, இயன்முறை மருத்துவ சிகிச்சை, உதவி உபகரணங்கள் பயன்படுத்தும் முறை ஆகியவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.