பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் கோவிந்தசாமி தலைமையில் வெங்கரை கிராமத்தில் தனியார் வேளாண்மை அறிவியல் கல்லூரி மாணவர்களால் இயற்கை முறை விவசாயம் குறித்த விழிப்புணர்வு செயல் விளக்க கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் வெங்கரை கிராம விவசாயிகளுக்கு பஞ்சகாவியம், 3ஜி கரைசல், அமிர்த கரைசல், ஜீவாமிர்தம் மற்றும் இயற்கை முறையில் எலி மேலாண்மை ஆகியவை குறித்த துண்டு பிரசுரங்கள் விவசாயிகளுக்கு அளிக்கப்பட்டது.
இதில் விவசாயிகளுக்கு இயற்கை முறையில் பூச்சி மற்றும் நோய் தொற்றுகளை இயற்கை முறையில் எவ்வாறு கையாள்வது என்பது குறித்து வேளாண் கல்லூரி மாணவர்கள் விளக்கினர்.