விழிப்புணர்வு முகாம் நடைபெற்றபோது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை குறித்த விழிப்புணர்வு முகாம்

நாமக்கல் எர்ணாபுரத்தில் காண்டாமிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் எர்ணாபுரத்தில் முத்துகுமார் என்பவரது தோட்டத்தில் பி.ஜி.பி வேளாண் கல்லூரி மாணவிகள் இயற்கை முறையில் காண்டா மிருக வண்டுகளை கட்டுப்படுத்தும் முறை குறித்து செய்முறை விளக்கம் அளித்தனர். 

ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் சுற்றுச்சூழல், தாவரங்கள் மற்றும் மனிதனுக்கு பாதிப்பு ஏற்படுகிறது.

இதற்கு மாறாக சுற்றுச்சூழலை பாதிக்காத வண்ணம் இயற்கை முறையில் காண்ட மிருக வண்டுகளை கட்டுபடுத்த இம்முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு மண்பானையில் 5 லிட்டர் நீருடன் 1 கிலோ ஆமணக்கு புண்ணாக்கு, ½ கிலோ நாட்டுச் சர்க்கரை சேர்த்து இக்கலவை தயாரிக்கப்படுகிறது.

இந்த கலவை உள்ள மண்பானையை தென்னந் தோப்பில் மரங்களுக்கு இடையில் நிலத்தில் வைத்து வண்டுகளை கட்டுப்படுத்தலாம். ஆமணக்கு புண்ணாக்கில் உள்ள கசப்புத் தன்மையால் வண்டுகள் அழிகப்படுகிறது என்பது குறித்து விளக்கப்பட்டது.