தாரமங்கலம்:
தாரமங்கலம் அருகில் உள்ள கருக்கல்வாடி கிராமம் நேரு நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (வயது 49). கூலி தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வடிவேல் என்பவருக்கும் நிலப்பிரச்சனை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் வீட்டின் அருகில் இருந்த முருகேசனை, வடிவேல் மற்றும் அவரது உறவினர் பழனிவேல் ஆகியோர் சேர்ந்து தாக்கியதாக தெரிகிறது. காயமடைந்த முருகேசன் சேலம் ஆஸ்பத்திரியில் சிகிச் சை பெற்று வருகிறார்.
இதுபற்றி புகாரின்பேரில் தாரமங்கலம் போலீசார், வடிவேல், பழனிவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் .