நாமக்கல்:
நாமக்கல் மாவட்டத்தில் 5 நகராட்சிகள், 19 பேரூராட்சி கள் உள்ளன. இங்குள்ள 447 வார்டுகளுக்கு வருகிற 19-ந்தேதி ஓட்டுப்பதிவு நடக்கிறது.
5 நகராட்சிகளில் உள்ள 153 வார்டுகளுக்கு 900 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். நாமக்கல் நகராட்சியில் பெறப்பட்ட 242 மனுக்களில் வேட்புமனு பரிசீலனையின்போது 20 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
இதேபோல் குமாரபாளையம் நகராட்சியில் 6 மனுக்களும், ராசிபுரத்தில் 8 மனுக்களும் தள்ளுபடி ஆயின. மொத்தம் 34 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. 866 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.