பரமத்திவேலூர்:Namakkal District News,
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா பாண்டமங்கலம் ராஜாவாய்க்கால் கரையோரம் அமைந்துள்ள மங்கள வராஹி அம்மன் ஆலயத்தில் மகா சண்டி ஹோமம் நடைபெற்றது.தொடர்ந்து மகா சண்டி ஹோமத்தில் பூரணகுதி இடப்பட்டு, வராகி அம்மனுக்கு கலசாபிஷேகம் நடந்தது.
விழாவை முன்னிட்டு நேற்றுமுன்தினம் மாலை 3மணிக்கு விநாயகர் பூஜை, மங்கல இசையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து 64 பைரவருக்கு பூஜை மற்றும் 13 அத்திரியாகங்கள் பாராயணம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. மகா சண்டி ஹோம விழா ஏற்பாடுகளை பக்தர்கள் மற்றும் பாண்டமங்கலம் ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்.