உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் தேசிய வேளாண்மை சந்தையில் தேங்காய் பருப்பு ஏலம்

பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர்.மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் விளையும் தேங்காய்களை உடைத்து அதை உலர்த்தி விவசாயிகள் வியாழக்கிழமை தோறும் பரமத்தி வேலூர் வெங்கமேட்டில் உள்ள பரமத்தி வேலூர் மின்னணு தேசிய வேளாண்மை சந்தைக்கு கொண்டு வருகின்றனர். இங்கு தரத்திற்கு தகுந்தார் போல் மறைமுக ஏலம் விடப்படுகிறது.கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலத்திற்கு 15 ஆயிரத்து 960 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ.77.01க்கும், குறைந்தபட்சமாக 51.99 க்கும்,சராசரியாக ரூ.76.89 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ.11 லட்சத்து 17ஆயிரத்து 263- க்கு ஏலம் நடைபெற்றது. ஏலத்திற்கு 10 ஆயிரத்து 245 கிலோ தேங்காய் பருப்பு கொண்டு வரப்பட்டிருந்தது. இதில் அதிகபட்சமாக கிலோ ஒன்று ரூ 78.99 க்கும் குறைந்தபட்சமாக ரூ 51.48 க்கும், சராசரியாக ரூ 77.49 க்கும் ஏலம் போனது. மொத்தம் ரூ 7 லட்சத்து 17ஆயிரத்து 153- க்கு ஏலம் நடைபெற்றது.