உள்ளூர் செய்திகள்

பொதுமக்களை அச்சுறுத்திய மலைத் தேனீக்கள் அகற்றம்

பரமத்தி வேலூர் தாலுகா சின்ன மருதூர் காலனியில் கிளுவமரம் உள்ளது.இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

பரமத்தி வேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா சின்ன மருதூர் காலனியில் கிளுவமரம் உள்ளது. இந்த மரத்தில் ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்கள் கூடு கட்டி இருந்தது.

இந்நிலையில் அந்த சாலையின் வழியாக செல்லும் பொதுமக்களை மலைத் தேனீக்கள் தீண்டி அச்சுறுத்தி வந்தது. இதுகுறித்து சின்ன மருதூர் காலனியை சேர்ந்த ரமேஷ் என்பவர் வேலாயுதம்பாளை யம் தீயணைப்புத் துறை யினரிடம் புகார் மனு கொடுத்து மலைத் தேனீக்களை அகற்றி தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அதன் அடிப்படையில் வேலாயுதம்பாளையம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று கிளுவ மரத்தில் கூடுகட்டி இருந்த ஆயிரக்கணக்கான மலைத் தேனீக்களை தண்ணீரை பீச்சி அடித்து அகற்றினர். இதனால் அப்பகுதி பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர்.

SCROLL FOR NEXT