பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பரமத்தி, பொத்தனூர் ஆகிய பகுதிகளில் விதிமுறைகளை மீறி அனுமதி பெறாமல் வைத்திருந்த பிளக்ஸ் பேனர்களை அகற்ற செயல் அலு வலர்கள் உத்தரவிட்டனர்.
அதன் பேரில் பரமத்தி, பரமத்திவேலூர், பொத்த னூர் ஆகிய பகுதிகளில் அனுமதி இல்லாமல் வைத்திருந்த சுமார் 50க்கும் மேற்பட்ட பிளக்ஸ் பேனர்களை பேரூராட்சி ஊழியர்கள் அகற்றினார்கள். இனிவரும் காலங்களில் பேரூராட்சி பகுதிகளில் அனுமதி இன்றி விளம்பர பிளக்ஸ் பேனர்கள் வைக்கப்பட்டால் அவர்கள் மீது கிரிமினல் நடவடிக்கை எடுக்கப்பட்டு அபராதம் விதிக்கப்படும் என செயல் அலுவலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.