ராசிபுரம் நகர மன்ற கூட்டம் தலைவர் கவிதா சங்கர் தலைமையில் நடைபெற்ற போது எடுத்த படம். 
உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் நகர மன்ற கூட்டத்தில் 14 தீர்மானங்கள் நிறைவேற்றம்

ராசிபுரம் நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர்மன்ற கூட்டம் கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் கவிதா சங்கர் தலைமை தாங்கினார். கூட்டத்தில் பாதாள சாக்கடை இணைப்புகளை சீரமைப்பு செய்ய ரூ.95 ஆயிரத்துக்கு அனுமதி கோருவது உள்பட 14 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இந்த கூட்டத்தில் நகராட்சி என்ஜினீயர் சாந்தி வடிவேல், பொதுப்பணி மேற்பார்வையாளர் தேவி, நகராட்சி துப்புரவு அலுவலர் செல்வராஜ், வருவாய் ஆய்வாளர் மாணிக்கம், நகர அமைப்பு அலுவலர் ராஜேந்திரன், நகர அமைப்பு ஆய்வாளர் முருகேசன், நகர் மன்ற துணைத் தலைவர் கோமதி உள்பட நகர் மன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

SCROLL FOR NEXT