உள்ளூர் செய்திகள்

மோட்டார் சைக்கிள்கள் மோதல்; கூலித் தொழிலாளி பலி

பரமத்திவேலூர் பகு தியில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். பரமத்தி வேலூர்- ஜேடர்பாளையம் சாலை யில் அண்ணாநகர் பகுதியில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பிலிக்கல்பாளையம் அருகே கரட்டூர் பகுதியை சேர்ந்த வர் வெள்ளைச்சாமி (வயது 58). கூலி தொழிலாளியான இவர், பரமத்திவேலூர் பகு தியில் வேலையை முடித்து விட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார்.

பரமத்தி வேலூர்- ஜேடர்பாளையம் சாலை யில் அண்ணாநகர் பகுதியில் சென்ற போது, பின்னால் வேகமாக வந்த மோட்டார் சைக்கிள், அவர் மீது மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் வெள்ளைச்சாமி நிலைத்தடுமாறி மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இது குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்து ஏற்படுத்தி நிற்கா மல் சென்ற வாகன ஓட்டு னர் குறித்து தீவிர விசா ரணை நடத்தி வருகின்றனர்.