உள்ளூர் செய்திகள்

சூதாட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் மீது வழக்கு

மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்டம் மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் துர்கைசாமி மற்றும் போலீசார் காவிரி ஆறு பகுதிக்கு சென்றனர்.

அப்போது போலீசாரை பார்த்தவுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தப்பி ஓடினர். அவர்களை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர். இதில் மோகனூர் பகுதியை சேர்ந்த தமிழ்வாணன் (48), மணிமாறன் (46), ஜெயபால் (38), விவேகானந்தன் (34), சிவக்குமார் (43), கார்த்திக் பார்த்தீபன் (32), வினோத் (23) ஆகிய 8 பேரை போலீசார் பிடித்தனர். மேலும் ரூ.17 ஆயிரம் ரொக்கம், 4 மோட்டார் சைக்கிள்கள், 8 செல்போன்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

பிடிப்பட்ட 8 பேர் மற்றும் தப்பியோடிய கிஷோர், தேவராஜ், அரவிந்த், சேகர், ராகுல் ஆகிய 13 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மோகனூர் காவிரி ஆற்றுப்பகுதியில் பணம் வைத்து சூதாடுவதாக மோகனூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது

SCROLL FOR NEXT