உள்ளூர் செய்திகள்

பரமத்தி வேலூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம்

பரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் அடையாளம் தெரியாத மூதாட்டி பிணம் கிடந்தது.

மாலை மலர்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் பேருந்து நிறுத்தத்தில் சுமார் 70 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் அங்குள்ளநிழல் கூட்டத்தின் கீழே இறந்து கிடந்தார் .அதை பார்த்த அங்குள்ள கடைக்காரர்கள் பரமத்தி வேலூர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு தகவல் தெரிவித்தனர். 

தகவலின் பேரில் அப்பகுதிக்கு விரைந்து வந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரம்மாள் மற்றும் போலீசார் இறந்து கிடந்த பெண் உடலை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

பிணமாக கிடந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்?  என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.