பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பொத்தனூர் தேவராய சமுத்திரம் பகுதியைச் சேர்ந்த மணிகண்டன், (26). இவர் அப்பகுதியில் உள்ள சிமெண்ட் கம்பெனியில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வந்தார். இவருக்கும் அப்பகுதியை சேர்ந்த ரமேஷ், ரவி, குமார் ஆகியோருக்கும் இடையே கார் நிறுத்துவது தொடர்பாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இரவு மீண்டும் தகராறு ஏற்பட்டது. இந்நிலையில் வீட்டுக்கு வந்த மணிகண்டன் நேற்று காலை நீண்ட நேரம் ஆகியும் வீட்டைவிட்டு வெளியே வரவில்லை.
இதனால் சந்தேகப்பட்ட அக்கம்பக்கத்தினர் வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தபோது அங்கு மணிகண்டன் வீட்டில் மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கியது தெரியவந்தது. இதுகுறித்து பரமத்திவேலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
தகவலின் அடிப்படையில் பரமத்திவேலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.