உள்ளூர் செய்திகள்

ராசிபுரம் பகுதியில் வடநாட்டு கொள்ளை கும்பல் ஊடுருவல்

ராசிபுரம் பகுதியில் காரில் வந்த வடநாட்டைச் சேர்ந்த மர்ம கும்பலால் பரபரப்பு ஏற்பட்டது.

ராசிபுரம்:

ராசிபுரம் அருகே உள்ள சேலம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபம் அருகில் இருந்து கட்டனாச்சம்பட்டி செல்லும் சாலையில் சிலர் குடியிருந்து வருகின்றனர். 

அந்தப் பகுதியில் வட நாட்டைச் சேர்ந்த சில இளைஞர்கள் தங்கி வருகின்றனர். இந்த நிலையில் நேற்று இரவு காரில் மர்ம கும்பல் வந்தது. அந்த மர்ம கும்பலைச் சேர்ந்த ஒருவர் அங்கு தங்கியிருந்த வடநாட்டு இளைஞர்களிடம் இந்தியில் பேசி உள்ளதாக தெரிகிறது. 

பணம் இருக்கிறதா? எவ்வளவு உள்ளது? என்று கேட்டுள்ளனர். எங்களிடம் பணம் ஏதும் இல்லை என்று அவர்கள் கூறியதாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கிருந்து சென்ற அந்த கும்பலைச் சேர்ந்த சிலர் அருகில் இருந்த ஒரு என்ஜினீயர் வீட்டின் கதவைத் தட்டி உள்ளனர். 

அவர்கள் சத்தம் போடவே காரில் வந்த மர்ம கும்பல் அங்கிருந்து தப்பிச்சென்றனர். வந்தவர்கள் இந்தியில் பேசியதால் அவர்கள் வடநாட்டை சேர்ந்த கொள்ளையர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

SCROLL FOR NEXT