போலீசார் கொடி அணிவகுப்பு நடத்திய காட்சி. 
உள்ளூர் செய்திகள்

திருச்செங்கோட்டில் போலீசாரின் கொடி அணி வகுப்பு

உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

மாலை மலர்

திருச்செங்கோடு:

நகர்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியான முறையில் நடத்தும் வகையில் முக்கிய இடங்களில் போலீசாரின் கொடி அணி வகுப்பு நடத்த,  நாமக்கல் மாவட்ட எஸ்.பி. உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து,  தேர்தல் குறித்த அச்சத்தை போக்குவதற்காகவும்,  மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காகவும் திருச்செங்கோடு டி.எஸ்.பி. (பொறுப்பு) பழனிச்சாமி தலைமையில் போலீசார் திருச்செங்கோடு கூட்டப்பள்ளி காலணி பகுதியில் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

இதில் திரளான போலீசார் கலந்துகொண்டனர். முக்கிய வீதிகள் வழியாக சென்ற கொடி அணிவகுப்பு தொடங்கிய இடத்தில் நிறைவடைந்தது.